ஸ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழருவி கண்காட்சி


ஸ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழருவி கண்காட்சி
x
தினத்தந்தி 11 April 2022 1:31 AM IST (Updated: 11 April 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழருவி கண்காட்சி நடைபெற்றது.

பாடாலூர்
பெரம்பலூர் மாவட்டம், பாடலூரில் அமைந்துள்ள ஸ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தமிழருவி கண்காட்சி நடைபெற்றது. இதற்கு பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.பிரபாகரன் தலைமை தாங்கினர். ஆலத்தூர் மேற்கு  ஒன்றிய செயலாளர் சோமு.மதியழகன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் பாலசந்திரன், துணை தாளாளர் கேசவ் பாலாஜி, பள்ளி முதல்வர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். தமிழர் மரபினை நினைவுக்கூறும் வகையில் இந்த தமிழருவி கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டது என்று வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்முகத்துடன் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். இக்கண்காட்சியில் வில்லுப்பாட்டு, மூவேந்தர்கள், சூரிய குடும்பம், சிலப்பதிகாரம், திருக்குறள் கதைகள், தசவதாரம், உணவே மருந்து, இயற்கை விவசாயம், நாட்டுப்புற கலைகள், பாரதம், கும்மி பறை, தமிழரின் விழாக்கள், திருவெம்பாவை, வள்ளல்கள், வேலுநாச்சியார், அண்ணாவை பற்றி, கொலுவின் சிறப்பு போன்ற தலைப்புகளை எடுத்து மாணவர்கள் உணர்ச்சி பொங்க தங்கள் உணர்வுகளை பேச்சாற்றல் மூலம் வெளிப்படுத்தினர். 

Next Story