ராமர் கோவிலில் நவமி விழா


ராமர் கோவிலில் நவமி விழா
x
தினத்தந்தி 11 April 2022 1:37 AM IST (Updated: 11 April 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவிலில் நவமி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அயோத்தியாப்பட்டணம்:-
சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில் பழமை வாய்ந்த கோதண்டராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. காலை 6 மணிக்கு கோவிலில் உள்ள மூலவரான ராமர். சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 8 மணி அளவில் முன்மண்டபத்தில் உற்சவ ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
ராமநவமி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணி அளவில் உற்சவமூர்த்தி கோவிலில் உள் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

Next Story