கட்டிட மேஸ்திரி விபத்தில் பலி


கட்டிட மேஸ்திரி விபத்தில் பலி
x
தினத்தந்தி 11 April 2022 1:38 AM IST (Updated: 11 April 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டிட மேஸ்திரி பலியானார்.

சங்ககிரி:-
திருப்பத்தூர் புளிக்குட்டை மேல் வட்டம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 35), கட்டிட மேஸ்திரி. திருப்பத்தூர் நாட்ராம்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (38), கட்டிட தொழிலாளி. உறவினர்களாக இவர்கள் இருவரும், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தங்கி கட்டிட வேலை செய்ய ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். காளியப்பன் வண்டியை ஓட்டினார். பின்னால் வெங்கடாசலம் உட்கார்ந்து கொண்டு திருப்பத்தூரில் இருந்து திருப்பூரை நோக்கி சென்றுகொண்டு இருந்தனர். 
சங்ககிரி அருகே சின்னாகவுண்டனூர் பைபாஸ் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது அதிகாலை 2.45 மணியளவில் சென்றது. அப்போது காளியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காளியப்பன், வெங்கடாசலம் ஆகியோர் படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் காளியப்பன் இறந்தார். வெங்கடாசலம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story