தஞ்சையில் திடீர் மழை
தஞ்சையில் திடீர் மழை பெய்தது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பகலில் தான் வெயிலின் கொடுமை என்றால் இரவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. இதனால் வீடுகளில் உள்ள மின்விசிறியில் இருந்து வரும் காற்று கூட அனல் காற்றாகவே வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மதியம் திடீரென மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரம் பெய்த மழை பின்னர் நின்று விட்டது. அவ்வப்போது லேசான தூறலும் காணப்பட்டது. இந்த மழை காரணமாக சாலையில் மழைநீர் உருண்டோடியது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. மழை காணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது.
இதேபோல் நாஞ்சிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வேங்கராயன்குடிகாடு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு அறுவடை செய்த நெல் குவியல்கள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story