சிவகிரி வேலாயுத சாமி கோவில் தேர் திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது
சிவகிரி வேலாயுத சாமி கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகிரி
சிவகிரியில் பிரசித்தி பெற்ற வேலாயுதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் திருவிழா நேற்று காலை 8 மணி அளவில் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணிக்கு தேரில் கலசம் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சாமி வீதி உலாவும், 14-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு பூத வாகனத்தில் சாமி வீதி உலாவும், 15-ந் தேதி இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா 16-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு வேலாயுதசாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின்னர் 10 மணிக்கு தேரில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 17-ந் தேதி மாலை 6 மணிக்கு தேர் மீண்டும் நிலை சேரும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந் தேதி நடராஜர் தரிசன நிகழ்ச்சியும், மாலை 4 மணி அளவில் நடராஜர் வீதி உலாவும், 20-ந் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவமும், சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story