ஊசி போட லஞ்சம் வாங்கிய டாக்டர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 11 April 2022 7:46 PM IST (Updated: 11 April 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

ஊசி போட லஞ்சம் வாங்கிய டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 
ஊசி போட லஞ்சம் வாங்கிய டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
 லஞ்சம் 
பால்கர் மாவட்டம் தாராப்பூர் ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டராக பணி செய்து வருபவர் சரத் விகாஷ் கெய்க்வாட் (வயது 44). இவர் பெண் நோயாளி ஒருவருக்கு ஊசி போட தலா ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி 3 ஊசிகள் போட ரூ.1,500 லஞ்சம் வாங்கியுள்ளார். 
4-வது ஊசி போட ரூ.500 லஞ்சம் கேட்டபோது, பெண் நோயாளியின் உறவினர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தனர்.
கைது 
இந்த நிலையில் ரூ.500 லஞ்சம் வாங்கியபோது, டாக்டர் விகாஷ் கெய்க்வாட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். மேலும் ஊழல் தடுப்பு சட்ட விதிகளின் கீழ் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். 
லஞ்ச வழக்கில் அரசு டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

1 More update

Next Story