ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோத்தகிரி
தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி தாசில்தார் காயத்ரி உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ் பாபு, பழனிசாமி மற்றும் கிராம உதவியர்கள் ஜெகதளா அருகே பெட்டட்டி பகுதியில் ஓடையை ஒட்டி ஆக்கிரமித்து 10 சென்ட் பரப்பில் பயிரிடப்பட்டு இருந்த தேயிலை செடிகளை பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி அகற்றினர்.
இதேபோன்று கிராம நிர்வாக அலுவலர்கள் சபீர் கான், மோகன் குமார், கிராம உதவியர் அரிவாகரன் உள்ளிட்டோர் கோத்தகிரி அருகே ராப்ராய் கிராம பகுதிக்கு சென்று அங்கு ஓடையை ஆக்கிரமித்து 10 சென்ட் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த தேயிலை செடிகளை பிடுங்கி அகற்றினர். மேலும் நடுஹட்டி கிராம பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயசுதா தலைமயிலான குழுவினர் ஓடையை ஆக்கிரமித்து சுமார் 15 சென்ட் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த தேயிலை செடிகளை அகற்றினர்.
Related Tags :
Next Story