ஓட்டப்பிடாரம் பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஓட்டப்பிடாரம் பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் தாலுகாவில் குளத்தின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் வரத்துக் கால்வாய்களில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த ஆக்கிரமிப்புகளால் மழை காலங்களில் பெய்யும் மழைநீர் குளங்களில் முறையாக தேங்காமல் வெளியேறி விளை நிலங்களுக்குள் புகுந்துவிவசாய பயிர்களை மூழ்கடித்து சேதத்தை ஏற்படுத்தின. இந்த வகையில் கடந்த மழை காலங்களில் 500-க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால் குளத்து நீர்வடிப்பகுதி மற்றும் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் படி நேற்று எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள குளம் மற்றும் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இந்த பணியில் மண்டல துணை தாசில்தார் ஆனந்த், கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துவேல் கண்ணன், சண்முகராஜ் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story