திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட புன்னக்காயல் பகுதியை சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டாவை அரசு வழங்கியது. இலவச வீட்டு மனைபட்டா வழங்கிய இடத்தை வருவாய் துறையினர் மாற்று திறனாளிகளுக்கு அடையாளம் காட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும் அந்த இடத்தை சரி செய்து அளந்து கொடுக்க வேண்டும் என மாற்று திறனாளிகள் தரப்பில் உரிய பணம் செலுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் விரக்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று திருச்செந்தூர் உதவிகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உதவி கலெக்டர் புஹாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story