கஞ்சாவுடன் 6 பேர் கைது
கஞ்சாவுடன் 6 பேர் கைது
திருப்பூர்,:-
திருப்பூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அதன்படி நேற்று அவினாசியில் கஞ்சா விற்ற ஒருவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவையும், சேயூரில் ஒருவரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவையும், உடுமலையில் ஒருவரை கைது செய்து 100 கிராம் கஞ்சாவையும், வெள்ளகோவிலில் ஒருவரை கைது செய்து 150 கிராம் கஞ்சாவையும், தாராபுரத்தில் ஒருவரை கைது செய்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும், ஊத்துக்குளியில் ஒருவரை கைது செய்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 6 பேரை கைது செய்து 1 கிலோ 850 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story