மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 April 2022 10:38 PM IST (Updated: 11 April 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மயிலாடுதுறை
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். இதில், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சீனி.மணி, செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், வட்டச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story