சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் போலீஸ் நிலையம் அருகே பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிப்பு


சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் போலீஸ் நிலையம் அருகே பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 11 April 2022 10:46 PM IST (Updated: 11 April 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் மேல்பாடி போலீஸ் நிலையம் அருகே வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவலம்
சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் மேல்பாடி போலீஸ் நிலையம் அருகே வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலிபர் தீக்குளிப்பு

வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள குகையநல்லூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சரத் (வயது 26). இவர் நெல் அறுவடை எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். 
இந்த நிலையில் மேல்பாடி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி என்பவர் தன்னை அடிக்கடி மிரட்டுவதாகக்கூறி,  மேல்பாடி போலீஸ் நிலையம் அருகே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் அவர் உடல் முழுவதும் தீபற்றி எரிந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று தீயை அணைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த அவரை ஆபத்தான நிலையில் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சரத்தின் உறவினர்கள், இதற்கு காரணமான சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மேல்பாடி போலீஸ் நிலையம் முன் சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். 
போலீஸ் நிலையம் முன் வாலிபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story