வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு


வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு
x
தினத்தந்தி 11 April 2022 10:50 PM IST (Updated: 11 April 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடந்தி வைக்கப்பட்டது.

சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மதீனா நகரை சேர்ந்த தம்பதியரின் மகன்களான நிதீஷ்குமார் மற்றும் சிவராஜ் தங்களது உறவினர் வீட்டிலிருந்து நாய் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வந்தனர். அந்த நாய் மீது குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிக அன்பு செலுத்தினர். அந்த நாயும் வீட்டில் உள்ள அனைவர் மீதும் அதிக பாசம் காட்டியது. அந்த நாய் கருவுற்றதால் அதற்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அருகில் வசிப்பவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து அந்த நாய்க்கு வளைகாப்பு நடத்தினர். 
வழக்கமாக வளைகாப்பு எப்படி நடத்தப்படுமோ அதேபோல பூ, பழங்கள், இனிப்பு, வளையல்கள் வைத்து இந்த வினோத சம்பவம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் அந்த நாய்க்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து ஆசிர்வதித்தனர்.

Next Story