நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்ட பணிகள்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்ட பணிக ளை கலெக்டர் ஆய்வு ஆய்வு செய்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்டத்தின் மூலம் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, மருந்து வழங்கப்படும் இடம், மருத்துவமனை வளாகம், அங்குள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, சிகிச்சை பெற வருபவர்களுக்கு தடையின்றி மருந்து,
மாத்திரைகள் வழங்குவதற்கு ஏற்ப போதுமான அளவு மருந்துகளை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவ பரிசோதனைக்கூடமும் தொடர்ந்து இயங்குவதை மருத்துவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
பின்னர் கலெக்டர் மோகன், நிருபர்களிடம் பேசுகையில், இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சிகிச்சை பெற வருவோர்கள் உடல் ஆரோக்கியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் சிகிச்சை பெற வேண்டும் என்பதே ஆகும்.
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோரின் ஒவ்வொரு மனதிலும் இது நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற நிலையை உருவாக்குவதே மருத்துவர்களின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்செல்வி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, காசநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் சுதாகர், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story