திண்டிவனம் நகரமைப்பு அலுவலரிடம் நூதன முறையில் பணம் அபேஸ்


திண்டிவனம் நகரமைப்பு அலுவலரிடம் நூதன முறையில் பணம் அபேஸ்
x
தினத்தந்தி 11 April 2022 11:03 PM IST (Updated: 11 April 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் நகரமைப்பு அலுவலரிடம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


விழுப்புரம், 

திண்டிவனத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 46). இவர் திண்டிவனம் நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த 9-ந் தேதியன்று ஒரு குறுந்தகவல் வந்தது.

 அதில் உங்களுடைய பான் கார்டை மீண்டும் புதுப்பிக்குமாறும், அவ்வாறு புதுப்பிக்கவில்லையெனில் உங்களுடைய வங்கி கணக்கு எண் முடக்கம் செய்யப்பட்டு விடும் என்றும் குறிப்பிட்டிருந்ததோடு அந்த குறுந்தகவலில் ஒரு லிங்க்கும் அனுப்பப்பட்டிருந்தது. 

உடனே கிருஷ்ணமூர்த்தி அந்த லிங்கிற்குள் சென்று தன்னுடைய பெயர், பாஸ்வேர்ட் மற்றும் பான் கார்டு எண்ணை பதிவு செய்தார். அப்போது வந்த ஓடிபி எண்ணையும் பதிவு செய்துள்ளார்.

 அடுத்த சில மணி நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியின் திண்டிவனம் கிளையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து 2 தவணைகளாக மொத்தம் ரூ.80,898 எடுக்கப்பட்டு விட்டதாக குறுந்தகவல் வந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி, 

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை நூதன முறையில் அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story