தியாகதுருகத்தில் விழிப்புணர்வு பேரணி
தியாகதுருகத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகத்தில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். தியாகதுருகம் வட்டார வள மையத்தில் தொடங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அன்பழகன், ஆசிரியர் பயிற்றுனர்கள் சிவக்குமார், விஜயலட்சுமி, காயத்ரி, ராஜா, முகம்மது இதயத்துல்லா, கோகிலா, ஆசிரியர்கள் தெய்வநாயகி, கண்ணன், அருள்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story