மின்னொளி கபடி போட்டி
கமுதி அருகே மின்னொளி கபடி போட்டி நடந்தது.
கமுதி,
கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் இரவு நேர மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில் ராமநாத புரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங் களில் இருந்து புதுக்கோட்டை, ராமசாமிபட்டி, குளத்தூர், பூமாவிலங்கை, தானியல் நகர், ஏனாதி உள்பட ஏராள மான பகுதிகளில் இருந்து 44 அணி வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கிராமப்புற இளைஞர்கள் தேசிய மற்றும் உலக அளவில் சாதனை படைக்க, கபடி வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த போட்டிக்கு ஊராட்சி தலைவர் வீரபாண்டி தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார்.மேலும் அவர் இதில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த புதுக்கோட்டை அணிக்கு, பரிசுத்தொகை ரூ.15 ஆயிரம் மற்றும் வெற்றிக்கோப்பை, வீரர்களுக்கு மெடல் வழங்கினார். 2-வது இடம் பிடித்த ராமசாமிபட்டி அணிக்கு ரூ.12 ஆயிரம், 3-ம் இடம் பிடித்த புதுக்கோட்டையை சேர்ந்த மற்றொரு அணிக்கு ரூ.10 ஆயிரம், குளத்தூர் அணிக்கு ரூ.8 ஆயிரம், பூமாவிலங்கை அணிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பைகள், மெடல்கள் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பகுதியில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதனை கண்டுகளித்தனர்.
Related Tags :
Next Story