காரிமங்கலத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா


காரிமங்கலத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
x
தினத்தந்தி 11 April 2022 11:22 PM IST (Updated: 11 April 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

காரிமங்கலம்:
காரிமங்கலத்தில் நகர தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு  நகர செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குமரவேல், மாவட்ட பொறுப்புக்குழு மாதேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அன்பழகன், நிர்வாகி கண்ணபெருமாள், மகளிரணி ஜெயா, மாவட்ட பிரதிநிதி காசிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பசேகரன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி மற்றும் நீர்மோர் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story