மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 April 2022 11:22 PM IST (Updated: 11 April 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தர்மபுரி:
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் தொந்தரவு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சிக்கமாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). தொழிலாளியான இவர் கடந்த 2016-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 
இதைத் தொடர்ந்து போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார். 
10 ஆண்டு ஜெயில்
இந்த விசாரணையின்போது ரமேஷ் மீதான பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து ரமேசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் விரைவு நீதிபதி சையத் பர்க்கதுல்லா நேற்று தீர்ப்பளித்தார்.

Next Story