முதியவர் பட்டினியால் சாவு


முதியவர் பட்டினியால் சாவு
x
தினத்தந்தி 11 April 2022 11:23 PM IST (Updated: 11 April 2022 11:23 PM IST)
t-max-icont-min-icon

முதியவர் பட்டினியால் உயிரிழந்தார்.

பெரம்பலூர்
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்திற்கு கீழ் அமர்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவத்தன்று பசி பட்டினியால் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக துறைமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story