நல்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்


நல்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 11 April 2022 11:25 PM IST (Updated: 11 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

நல்லூர் மாரியம்மன் கோவில் திருவிழா பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கந்தம்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் நல்லூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன், வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன. இதில் மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதல் மற்றும் கம்பன் நடுதலுடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை பக்தர்கள் விரதம் இருந்து புனிதநீர் கொண்டு வந்து கோவில் முன்பு உள்ள கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வந்தனர் இதனைத்தொடர்ந்து பூவோடு எடுத்தல், மாவிளக்கு, பொங்கல் வழிபாடு, மலர் அலங்காரம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் நேற்று மாலை கோவில் முன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோவில் பூசாரி முதலில் பூக் குண்டம் இறங்கியும், அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் கந்தம்பாளையம், நல்லூர், பெருமாபட்டி, கவுண்டிபாளையம், காளியப்பனூர், முசல்நாய்க்கன்பாளையம், செல்லப்பம்பாளையம், வாழ்நாயக்கன்பாளையம் ஆகிய எட்டுப்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்

Next Story