நாமக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 260 மனுக்கள் பெறப்பட்டன

நாமக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 260 மனுக்கள் பெறப்பட்டன
நாமக்கல்லில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 260 மனுக்கள் பெறப்பட்டன
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மொத்தம் 260 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ரமேஷ் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com