வேறு ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி பெண்களிடம் பணம் பறிப்பு


வேறு ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி பெண்களிடம் பணம் பறிப்பு
x
தினத்தந்தி 11 April 2022 11:41 PM IST (Updated: 11 April 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் சமூக வலைதளத்தில் வேறு ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி, பெண்களிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி

ஆரணியில் சமூக வலைதளத்தில்  வேறு ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி, பெண்களிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெண்களிடம் பணம்பறிப்பு

ஆரணியை அடுத்த பையூர் கிராமம் பிராமணர் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பாலாஜி (வயது 23). 

சமூக வலைதளங்களில் உள்ள இவரது புகைப்படத்தை பயன்படுத்தி ஆரணி சபாஷ் தெருவைச் சேர்ந்த பயாஸ் (24) என்பவர் பல பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பணம் பெற்று வந்தள்ளார். 

சமூக வலைதளங்களில் பாலாஜியின் நண்பர் அதனை பார்த்துவிட்டு தெரிவித்துள்ளார். 

அதைத்தொடர்ந்து சமூக வலைதளத்தை பயன்படுத்தும் உண்மையான நபர் யார் என விசாரித்து, பாலாஜியின் புகைப்படத்தை பயன்படுத்துவது  ஆரணி சபாஷ் தெருவைச் சேர்ந்த பயாஸ் என்பது உறுதி செய்யப்பட்டது.

வாலிபர் கைது

இந்த நிலையில் ஆரணி பஸ் நிலையம் அருகே பாலாஜி சென்றபோது, எதிரே வந்த பயாசிடம், என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி நீ பல பெண்களிடம் ஏமாற்றி பணம் பறித்து வவருவதால், எனக்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது எனக்கூறி, உடனடியாக படத்தை அகற்றிவிடு எனக் கூறியுள்ளார். 

அப்போது அவருடன் இருந்த பாலாஜியை, பயாஸ் கையால் தாக்கி கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். 

இது சம்பந்தமாக பாலாஜி ஆரணி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பயாசை செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story