குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

குளத்தில் மூழ்கி முதியவர் இறந்தார்.
குளத்தில் மூழ்கி முதியவர் சாவு
Published on

திருமயம்:

திருமயம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 75). இவர் இன்று சீமான்னூர் சாலையில் உள்ள மலையடி குளத்தில் குளிக்க சென்றார். அப்போது குளத்தில் குளித்து கொண்டு இருக்கும்போது, மாரிமுத்து கால் தடுமாறி குளத்திற்குள் விழுந்தார். இதில் நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து குளத்தில் இறங்கி மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com