ஜோலார்பேட்டை அருகேஓடும் ரெயிலில் ஐகோர்ட்டு பெண் வக்கீலுக்கு பாலியல் தொந்தரவு. ஐ.டி. நிறுவன ஊழியர் கைது
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் ஐகோர்ட்டு பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.டி. நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் ஐகோர்ட்டு பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.டி. நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை
சென்னை மேற்கு விரிவு, அண்ணா நகர், முதல் தெரு பகுதியை சேர்ந்த 44 வயது பெண் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 9-ந்் தேதி பெங்களூருவில் நடந்த மாவட்ட நீதிபதி தேர்வுக்கு சென்றுவிட்டு, மீண்டும் பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றுள்ளார்.
இரவு நேரம் என்பதால் தூங்கிக் கொண்டு வந்துள்ளார். அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட வக்கீலை அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கறிஞர் ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஐ.டி. நிறுவன ஊழியர் கைது
பின்னர் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தவுடன் அங்கு இறங்கி அங்குள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் அந்த வாலிபரை அழைத்து சென்று நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் புகார் மனு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அந்த வாலிபரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டம், திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த செல்வன் என்பவரின் மகன் கந்தன் (26) என்பதும், பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து கந்தனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story