அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் பாண்டங்கள் கண்டெடுப்பு


அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் பாண்டங்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 19 April 2022 7:38 PM GMT (Updated: 19 April 2022 7:38 PM GMT)

சிவகாசி அருகே அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டது.

தாயில்பட்டி, 
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. அதில் தற்போது வரை நான்கு குழிகள் தோண்ட பட்டுள்ளன. 2 குழிகள் 7 அடி ஆழத்திலும், 3-வது குழி 5 அடி ஆழமும், 4-வது குழி 3 அடி ஆழத்திலும் தோண்டப்பட்டது. இதில் 4-வது தோண்டப்பட்ட குழியில்  நுண்கற்கால கருவிகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களில் சில பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட சதுரங்க கட்டைகள், ஆடுபுலி ஆட்டத்திற்கு  பயன்படுத்தப்பட்ட கட்டைகள் கிடைத்தன. அதேபோல மிருகங்களின் கொம்புகள், உணவு சமைக்க பயன்படுத்தப்பட்ட மண்சட்டி, சுடுமண்ணால் செய்யப்பட்ட கின்னம், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் பொம்மைகள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர், இணை இயக்குனர் பரத்குமார் ஆகியோர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், 4-வது பள்ளம் கூடுதல் ஆழத்தில் தோண்டப்படும் போதும், 5-வது குழி தோண்டப்படும் போதும் இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 


Next Story