ஹூட்கா பார்களில் போலீசார் திடீர் சோதனை
ஹூட்கா பார்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
பெங்களூரு: பெங்களூரு ஜீவன்பீமாநகர், கமர்சியல்தெரு, மடிவாளா ஆகிய 3 போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 3 ஹூட்கா பார்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த 3 பார்களிலும் விதிமுறைகளை மீறி நள்ளிரவு வரை திறக்கப்பட்டு இருந்ததுடன், சட்டவிரோதமாக கல்லூரி மாணவர்களுக்கும் ஹூட்கா விற்றது தெரிந்தது. இதையடுத்து, 3 ஹூட்கா பார்களின் உரிமையாளர்கள், மேலாளர்கள் மீது ஜீவன்பீமாநகர், கமர்சியல்தெரு, மடிவாளா போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
3 ஹூட்கா பார்களில் இருந்தும் ரூ.1½ லட்சம் ஹூட்கா தயாரிக்க பயன்படும் பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story