அருணாசல பிரதேசம்; இந்தோ- சீனா எல்லையில் 18 தொழிலாளர்கள் மாயம்


அருணாசல பிரதேசம்; இந்தோ- சீனா எல்லையில் 18 தொழிலாளர்கள் மாயம்
x

அசாமை சேர்ந்த 19 தொழிலாளர்கள் அருணாசல பிரதேசம் வந்து சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் காணாமல்போனதாக ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார்

இடாநகர்,

அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே அமைந்துள்ள குருங் குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் 19 தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

தலைநகர் இடாநகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாமின் வட்டம் அருகே கடந்த 2 வாரங்களுக்கு முன் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் மாயமானதாக கூறப்படுகிறது.அசாமை சேர்ந்த 19 தொழிலாளர்கள் அருணாசல பிரதேசம் வந்து சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் காணாமல்போனதாக ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார். அங்குள்ள நதி ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாயமான ஏனைய 18 பேரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டு இருக்கலாம் என்று அங்குள்ள மக்கள் மத்தியில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

பக்ரீத் பண்டிகைக்கு விடுப்பு அளிக்க தொழிலாளர்களை அழைத்து வந்த ஒப்பந்ததாரர் மறுத்துவிட்டதால், அடர்ந்த வனப்பகுதி வழியாக நடைபயணமாகவே தொழிலாளர்கள் சென்ற போதுதான் மாயமாகி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், குறிப்பிட்ட இடத்தில் மீட்பு பணியினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருப்பதாகவும் தொழிலாளர்கள் அனைவரும் குமே ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுவது குறித்தும் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story