உத்தரபிரதேசம்: மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, 25 பேர் காயம்
உத்தரபிரதேசத்தில் மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்துள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
அலிகார்,
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் இன்று காலையில் சுமார் 30 முதல் 40 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஃபரூக்காபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 25 பேர் காயமடைந்தனர். டிரைவர், ஸ்டியரிங் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் குல்தீப் சிங் கூறும்போது, காயமடைந்த 25 பயணிகளில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஒரு பெண் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
Related Tags :
Next Story