மாநகராட்சி காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் மோசடி


மாநகராட்சி காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் மோசடி
x

மாநகராட்சி காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த மராட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மாநகராட்சி காண்டிராக்டராக இருப்பவர் குமரேஷ். இவர், தனது ஊழியர் கிஷோர் குமார் மூலம் மராட்டிய மாநிலம் யோதமால் ராடிகன் பகுதியை சேர்ந்த அமோல் சர்ஜெராவ் உர்குடே(வயது 23) என்பவரிடம் சில உபகரணங்களை வாங்க ஆர்டர் செய்தார். அந்த உபகரணங்களுக்கு ரூ.13 லட்சம் ஒப்பந்தம் செய்யப்பட்டு முன்பணமாக 10 லட்சம் ரூபாய் அமோலிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து மராட்டியத்தில் இருந்து உபகரணங்களை கொண்டுவர கிஷோர் குமார் சென்றுள்ளார். ஆனால் அங்கு அமோல் இல்லை. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் அவர், உபகரணங்கள் தருவதவதாக கூறி மாநகராட்சி காண்டிராக்டர் குமரேசிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து குமரேஷ், மங்களூரு வடக்கு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீசார், அமோலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story