ஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு


ஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
x

உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கவுசாம்பி,

உத்தரப்பிரதேசம் மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள கோக்ராஜ் பகுதியில் கங்கை ஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குரை கிராமத்தைச் சேர்ந்த அஜய் (வயது 10) என்ற சிறுவன் தன்னுடைய நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். உள்ளூர் டைவர்ஸ் உதவியுடன், உயிரிழந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 More update

Next Story