கர்நாடகத்தில் புதிதாக 1,105 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் இன்று புதிதாக 1,105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் இன்று 20 ஆயிரத்து 894 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதல் 1,105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பெங்களூரு நகரில் 775 பேருக்கும், மைசூருவில் 66 பேருக்கும், உடுப்பியில் 20 பேருக்கும், சிவமொக்காவில் 32 பேருக்கும், தார்வாரில் 21 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 23 பேருக்கும், உத்தரகன்னடாவில் 11 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தார்வாரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே நாளில் 1,432 பேர் குணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பு விகிதம் 5.28 ஆகும்.
Related Tags :
Next Story