கர்நாடகத்தில் நீட் தேர்வை 1.19 லட்சம் பேர் எழுதினர்


கர்நாடகத்தில் நீட் தேர்வை 1.19 லட்சம் பேர் எழுதினர்
x

கர்நாடகத்தில் நீட் தேர்வை 1.19 லட்சம் பேர் எழுதினர்.

பெங்களூரு:

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை எழுத கர்நாடகத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 626 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்த அனைவரும் நேற்று தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்காக பெங்களூரு, பெலகாவி, மைசூரு, மங்களூரு, தார்வார் உள்பட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடந்தது.

தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு நேற்று காலையில் இருந்தே மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்களுடன் பெற்றோரும் வந்திருந்தனர். தேர்வு மையங்களுக்கு செல்லும் முன்பு மாணவ-மாணவிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மாணவ-மாணவிகளுக்கு கடும் கெடுபிடி விதிக்கப்பட்டது. பெண்களுக்கு தங்கநகைகள் அணிந்து செல்ல தடைவிதிக்கப்பட்டது. தேர்வு மையத்திற்குள் ஒரு தண்ணீர் பாட்டில், சானிடைசர் எடுத்து செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.


Next Story