'நீட்' தேர்வு இன்று நடக்கிறது: கர்நாடகத்தில் 1.19 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்


நீட் தேர்வு இன்று நடக்கிறது: கர்நாடகத்தில் 1.19 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
x

‘நீட்’ தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை கர்நாடகத்தில் 1.19 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

பெங்களூரு:

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கர்நாடகத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 626 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. பெங்களூரு, தார்வார், மங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நீட் தேர்வுக்காக, தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை உயர்கல்வித்துறை மற்றும் கல்வித்துறை செய்துள்ளது.

நீட் தோ்வை எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் எந்த விதமான ஆபரணங்களும் அணிவதற்கு அனுமதி இல்லை. எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் நீட் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெராக்ஸ் கடைகள், சைபர் கபே கடைகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


Next Story