உத்தரகாண்டில் மலைப்பகுதி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 12 பேர் பலி
ஜோஷிமாத் பகுதியில் மலைச்சாலையில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள பல்லா ஜாக்கோல் என்ற கிராமத்துக்கு நேற்று மாலை ஒரு காரில் 16 பேர் சென்றனர். அவர்கள் காருக்குள் நெருக்கியடித்து அமர்ந்திருந்ததுடன், அதன் மேல் பகுதியிலும் அமர்ந்து பயணித்தனர்.
ஜோஷிமாத் பகுதியில் உர்காம் என்ற இடத்தில் மலைச்சாலையில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 300 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதில் கார் அப்பளமாக நொறுங்கியது. காரில் பயணித்தவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். கார் கவிழப்போன கடைசி வினாடியில் அதிலிருந்து குதித்த 2 பேர் உயிர் பிழைத்தனர்.
Related Tags :
Next Story