கர்நாடகத்தில் புதிதாக 1,465 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,465 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 1,465 பேருக்கு கொரோனா
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 24,564 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெங்களூரு நகரில் 987 பேர், மைசூரூவில் 99 பேர், ஹாசனின் 73 பேர் உட்பட புதிதாக 1,465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பல்லாரி, தார்வாரில் தலா ஒருவர் இறந்தனர். இதுவரை 40 லட்சத்து 43 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 40 ஆயிரத்து ஆயிரத்து 176 பேர் உயிரிழந்துள்ளனர். 1,295 பேர் நேற்று குணம் அடைந்தனர். 39 லட்சத்து 92 ஆயிரத்து 637 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 10, 709 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com