ரூ.15 லட்சம் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்; வியாபாரி கைது


ரூ.15 லட்சம் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்; வியாபாரி கைது
x

சென்னகிரி அருகே, வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சிக்கமகளூரு;

சந்தன மரக்கட்டை

தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா கவுசர் மசூதி அருகே உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக சென்னகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் சென்னகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னா், அந்த பகுதியில் சந்தேகப்படும் படியான வீடுகளில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வெட்டி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

ரூ.15 லட்சம் மதிப்பிலான.....

இதையடுத்து வீட்டில் இருந்த தஸ்தகிர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வனப்பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி சந்தன மரக்கட்டைகளை வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சட்டவிரோதமாக வெட்டி வைத்திருந்த 510 கிலோ சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். அந்த சந்தன மரக்கட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தஸ்தகிரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் அதிரடி சோதனையால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சிறப்பாக செயல்பட்ட சென்னகிரி போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.


Next Story