ரூ.16¼ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்


ரூ.16¼ லட்சம் மதிப்பிலான  வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
x

ரூ.16¼ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பார்சல்களை சுங்கத்துறை அதிகாாிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பார்சலில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிகரெட் பாக்கெட்டுகள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ரூ.16¼ லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தேவனஹள்ளி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story