இந்தியாவில் சாலை விபத்துகளின்போது 'சீட்டு பெல்ட்' அணியாததால் 16 ஆயிரம் பேர் பலி


இந்தியாவில் சாலை விபத்துகளின்போது சீட்டு பெல்ட் அணியாததால் 16 ஆயிரம் பேர் பலி
x

இந்தியாவில் சாலை விபத்துகளின்போது ‘சீட்டு பெல்ட்’ அணியாததால் 16 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகளில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளின்போது, 4 சக்கர வாகனங்களில் 'சீட்டு பெல்ட்' அணியாததால் 16 ஆயிரத்து 397 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 8,438 பேர் டிரைவர்கள் ஆவார்கள். எஞ்சிய 7,959 பேர் பயணிகள்.

'சீட்டு பெல்ட்' அணியாமல் விபத்தில் சிக்கி 39 ஆயிரத்து 231 பேர் காயம் அடைந்தும் இருக்கிறார்கள். மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்கி 46 ஆயிரத்து 593 பேர் பலியாகி உள்ளனர். ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் அகப்பட்டு, காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 93 ஆயிரத்து 763 ஆகும்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியும், அவரது நண்பர் ஜகாங்கிர் பந்தோலும் சீட்டு பெல்ட் அணியாத நிலையில் கார் விபத்தில் சிக்கி கடந்த செப்டம்பர் மாதம் 4-ந்தேதி பலியானது நினைவுகூரத்தக்கது.


Next Story