கர்நாடகத்தில் புதிதாக 1,694 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 1,694 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் இன்று 28 ஆயிரத்து 118 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 1,105 பேருக்கும், பெலகாவியில் 80 பேருக்கும், பல்லாரியில் 48 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 15 பேருக்கும், தாவணகெரேயில் 32 பேருக்கும், தார்வாரில் 98 பேருக்கும், ஹாவேரியில் 14 பேருக்கும், கலபுரகியில் 20 பேருக்கும், குடகில் 22 பேருக்கும், கோலாரில் 15 பேருக்கும், மைசூருவில் 48 பேருக்கும், ராய்ச்சூரில் 16 பேருக்கும், சிவமொக்காவில் 34 பேருக்கும், உத்தரகன்னடாவில் 34 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராய்ச்சூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே நாளில்1,741 பேர் குணம் அடைந்தனர். 11 ஆயிரத்து 355 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 6.2 ஆக உள்ளது. மேற்கண்ட இந்த தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.


Next Story