கர்நாடகத்தில் 1,837 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் 1,837 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் 1,837 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 29 ஆயிரத்து 425 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 1,137 பேருக்கும், பாகல்கோட்டையில் 28 பேருக்கும், பல்லாரியில் 55 பேருக்கும், பெலகாவியில் 57 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 36 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 19 பேருக்கும், சிக்கமகளூருவில் 15 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 15 பேருக்கும், தாவணகெரேயில் 25 பேருக்கும், தார்வாரில் 113 பேருக்கும், ஹாவேரியில் 17 பேருக்கும், கலபுரகியில் 26 பேருக்கும், குடகில் 32 பேருக்கும், கோலாரில் 26 பேருக்கும், கொப்பலில் 24 பேருக்கும், மைசூருவில் 83 பேருக்கும், ராய்ச்சூரில் 18 பேருக்கும், சிவமொக்காவில் 20 பேருக்கும், துமகூருவில் 26 பேருக்கும், உத்தரகன்னடாவில் 16 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தட்சிண கன்னடா, தாவணகெரே, மண்டியா, பெங்களூரு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு விகிதம் 6.24 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 1,290 பேர் குணம் அடைந்தனர். 11 ஆயிரத்து 898 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கர்நாடகத்தில் இதுவரை இறப்பு மிக குறைவாக இருந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்ததால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.


Next Story