ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் கடிதம் விடுத்த 2 பேர் கைது!


ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் கடிதம் விடுத்த 2 பேர் கைது!
x

அந்த கடிதத்தில் ராகுல் காந்தி கொலை செய்யப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது.

போபால்,

இந்துத்வா கொள்கை கொண்ட சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் சிறையில் இருந்தபோது பயத்தின் காரணமாக ஆங்கிலேயர் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும், ஆங்கிலேயர் அரசுக்கு உதவியதாகவும் மராட்டியத்தில் நடைபெற்று வரும் நடைபயணத்தில் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

இதற்கு பா.ஜனதா, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. வீர சாவர்க்கர் நாசிக்கில் உள்ள பகுர் என்ற ஊரை சேர்ந்தவர் என்ற நிலையில், அங்கு நேற்று முழு அடைப்புக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்தது.

இதற்கு ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் சத்ரபதி சிவாஜி சவுக்கில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் இந்தூர் நகரில் நவம்பர் 28 அன்று ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டால் அங்கு குண்டுவெடிப்பு நிகழும் என்று மிரட்டல் கடிதம் கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த கடிதத்தில் ராகுல் காந்தி மற்றும் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும், 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story