ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்ட 2 பெண் டாக்டர்கள்


ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்ட 2 பெண் டாக்டர்கள்
x
தினத்தந்தி 26 Nov 2022 9:25 PM GMT (Updated: 26 Nov 2022 9:52 PM GMT)

பிரசவம் ஆன பெண்ணை டிஸ்சார்ஜ் செய்ய ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்ட 2 பெண் டாக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ராமநகர்-

ராமநகர் மாவட்டம் மாகடி அருகே வசித்து வருபவர் மஞ்சப்பா. இவரது மனைவி ரூபா. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரூபா, பிரசவத்திற்காக மாகடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்து இருந்தது. இந்த நிலையில் ரூபாவை டிஸ்சார்ஜ் செய்ய மஞ்சப்பாவிடம், ஆஸ்பத்திரியில் டாக்டர்களாக பணியாற்றி வரும் சசிகலா, ஐஸ்வர்யா ஆகியோர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளனர்.அப்போது மஞ்சப்பா தன்னிடம் ரூ.2 ஆயிரம் மட்டுமே இருப்பதாகவும், அதை தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதனை டாக்டர்கள் ஏற்க மறுத்து உள்ளனர். 'எல்லாரும் ரூ.6 ஆயிரம் தருகிறார்கள், நீங்கள் மட்டும் ரூ.2 ஆயிரம் தந்தால் எப்படி?' என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த நிலையில் மஞ்சப்பாவிடம், பெண் டாக்டர்கள் லஞ்சம் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து சசிகலா, ஐஸ்வர்யாவை பணி இடைநீக்கம் செய்து ராமநகர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி காந்தராஜ் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story