பைக்கில் சென்றவர்கள் மீது அறுந்து விழுந்த மின்கம்பி - 2 பேர் பலி
பைக்கில் சென்றவர்கள் மீது மின்கம்பி அறுந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்டத்தை சேர்ந்த ஹைசர் அலி (55), சகீர் அலி (58) பைக்கில் தங்கள் கொய்யா தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.
கக்ரலா - ஆலப்பூர் சாலையில் இருவரும் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த பைக் மீது மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதில், இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தைக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின் கம்பி மரத்தால் ஆன கட்டையால் பிடிமானத்திற்கு வைக்கப்பட்டிருந்ததே விபத்துக்கு காரணம் என கோரி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story