2032-ம் ஆண்டுக்குள் பசுமை எரிசக்தி துறையில் ரு.2½ லட்சம் கோடி முதலீடு -அதிகாரி தகவல்


2032-ம் ஆண்டுக்குள் பசுமை எரிசக்தி துறையில் ரு.2½ லட்சம் கோடி முதலீடு -அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

2032-ம் ஆண்டுக்குள் பசுமை எரிசக்தி துறையில் ரு.2½ லட்சம் கோடி முதலீடு என்று அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் எரிபொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாக பசுமை எரிசக்தி உற்பத்தியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 2032-ம் ஆண்டிற்குள் மாநிலத்தின் எரிசக்தி துறையில் ரூ.2½ லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என கர்நாடக எரிசக்தி துறை முதன்மை செயலாளர் குமார் நாயக் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'கர்நாடகத்தில் தனியார் பங்களிப்புடன் 10 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஷராவதி பகுதியில் 2 ஆயிரம் மெகாவாட் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கர்நாடக மாநிலம் முன்னிலை வகித்து வருகிறது' என்றார்.


Next Story