மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மேலும் 2 விபத்து


மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மேலும் 2 விபத்து
x

புனே மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று இரவு நவாலே பாலத்தில் தறிகெட்டு ஓடிய லாாி அடுத்தடுத்து மோதிய விபத்தில் சுமார் 25 வாகனங்கள் சேதமடைந்தன.

மும்பை,

புனே மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று இரவு நவாலே பாலத்தில் தறிகெட்டு ஓடிய லாாி அடுத்தடுத்து மோதிய விபத்தில் சுமார் 25 வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தநிலையில் லாரி விபத்து நடந்த அடுத்த சில மணி நேரத்தில் அதே பகுதியில் மேலும் 2 விபத்துக்கள் நடந்து உள்ளன.

முதல் விபத்தில் நவாலே பாலத்துக்கு அருகில் உள்ள சுரங்கபாதைக்கு வெளியில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த லாரி 4 வாகனங்கள் மீது மோதியது. அதே இடத்தில் மற்றொரு விபத்தில் இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஒருவர் பலியானதாக பாரதிவித்யாபீத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.


Next Story