சாலை விபத்தில் 2 பேர் சாவு
மோட்டார் சைக்கிள், லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிவமொக்கா:-
மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்
சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா மாஸ்திகட்டே பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 47). இவரது மனைவி சாலினி (42). இவர்களது உறவினர் மகன் சசிரா (10) இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு உல்லிகல் பகுதியில் உள்ள கோவிலில் நடந்த கார்த்திகை தீப ஆராதனை விழாவில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மாஸ்திகட்டே பகுதியில் சென்றபோது, எதிேர வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
2 பேர் சாவு
இதில் ரவி மற்றும் சசிரா ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஷாலினி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினாா். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஷாலினியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாஸ்திகட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.