விவசாயி கொலையில் அண்ணன் உள்பட 2 பேர் கைது


விவசாயி கொலையில் அண்ணன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் விவசாயியை கொலை செய்த அண்ணன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா:-

விவசாயி கொலை

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா ஆனவட்டி துடிநீரு கிராமத்தை சேர்ந்தவர் சலீம்(வயது 24), விவசாயி. கடந்த 15-ந் தேதி சலீம் தனது வயலுக்கு சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் ஆனவட்டி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சலீமை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வயல் அருகே இருந்த புதரில், சலீம் பிணமாக மீட்கப்பட்டார்.

இதை பார்த்த கிராம மக்கள் ஆனவட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது சலீமின் அண்ணனான ரபீக் (24) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தம்பியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

அண்ணன் உள்பட 2 பேர் கைது

அதாவது சலீம், ரபீக் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதில் ரபீக்கிற்கு திருமணம் முடிந்துவிட்டது. மனைவியுடன் வசித்து வந்தார். சலீம்மிற்கு அண்ணன் மனைவி மீது ஆசை ஏற்பட்டது. அடிக்கடி அண்ணன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை ரபீக்கிடம் மனைவி கூறினார். கோபமடைந்த ரபீக், தம்பி சலீமை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தனது நண்பரான சந்தோஷ் என்பவரின் உதவியை நாடினார்.

இதையடுத்து கடந்த 15-ந் தேதி வீட்டில் சலீம் வயலுக்கு ெசன்றதை பார்த்தனர். நள்ளிரவு வயலுக்கு சென்ற ரபீக் மற்றும் சந்தோஷ், கல்லை எடுத்து சலீம் தலை மீது போட்டு கொலை செய்தனர். பின்னர் உடலை பாயில் சுற்றி பதனிகட்டே பகுதியில் உள்ள புதரில் வீசிவிட்டு சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரபீக் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சந்தோஷை கைது செய்தனர். இதுகுறித்து ஆனவட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story