தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது; ரூ.1.38 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
உப்பள்ளி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.38 லட்சம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா ஆனந்த நகரில் வசித்து வருபவர் சோமசேகர் ராமண்ணா. இவர் கடந்த 18-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார்.
இதையறிந்த மா்மநபா்கள் அவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்து ரூ.1.38 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து பழைய உப்பள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் மர்மநபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் அந்த திருட்டில் ஈடுபட்ட உப்பள்ளி செட்டில்மென்ட் கங்காதராநகர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வர்(வயது 28) மற்றும் மஞ்சுநாத்(34) ஆகியோரை கைது ெசய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ரூ.1.38 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை உப்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிைறயில் அடைத்தனர்.