வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து சிவமொக்கா போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிவமொக்கா:-
வீட்டில் தனியாக...
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஒளேஒன்னூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெற்றோருடன் 6 வயது சிறுமி வசித்து வந்தாள். இவரது வீட்டின் அருகே 19 வயது வாலிபர் வசித்து வந்தார். இவர் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு சென்று வருவார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் கூலி வேலைக்காக வெளியே சென்றனர். அப்போது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.
அதைதெரிந்து கொண்ட வாலிபர், சிறுமியின் வீட்டிற்கு சென்றார். பின்னர், வீட்டின் கதவை பூட்டி கொண்டு, சிறுமியை ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து யாரிடடுமும் கூறாமல் இருந்துள்ளாள். எனினும் சில நாட்களில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை, பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறினார். இதைகேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
ரூ.1 லட்சம் அபராதம்
மேலும், சிறுமியிடம் இது குறித்து கேட்டனர். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி உள்ளார். இதையடுத்து வாலிபர் மீது சிறுமியின் பெற்றோர் ஒளேஒன்னூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், அந்த வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை வாலிபர் பலாத்காரம் செய்தது உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டார்.